ன்றைய தமிழ்ப் படைப்பு உலகத்தில் தவிர்க்க முடியாத பெயர் எஸ் .ராமகிருஷ்ணன்.குறிப்பாக நவீன இலக்கிய உலகில் அவர் அழுத்தமான தடம் பதித்திருப்பவர்.

15 திரைப்படங் களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப் பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

தமிழக அரசின் விருது தொடங்கி சாகித்ய அகாடமி வரை பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். எஸ் .ராமகிருஷ்ணன் என்பவர் தனி நபர் அல்ல, அவர் ஓர் இயக்கம் என்கிற அளவில் அவரது எழுத்துப்பணி விரிந்து நிற்கிறது. வருபவர்களுக்கு வாசிப்பு வளங்களை வழங்கிக் கொண்டே இருப்பார். அதனால் தான் அவரைச் சுற்றி எப்போதும் இளைஞர் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அவரது இணையதளத்தை அவரது வாசகர்களுக்கான உலகமாக விஸ்தரித்துக் கொண்டே இருக்கிறார். அதை அடையாளப்படுத்தும் வகையில் சென்னையில் நிவேதனம் அரங்கில் எஸ். ராமகிருஷ்ணனுடன் ஒருநாள் என்கிற ஒரு முழுநாள் நிகழ்ச்சியை யாவரும் பதிப்பகமும் நற்றிணை கலந்துரையாடல் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நீதியரசர் சந்துரு தலைமை ஏற்று எஸ். ராமகிருஷ்ணன் பற்றி அவரது படைப்புகள் பற்றியும் விரிவான உரை ஆற்றினார். அவர் பேசும்போது இடக்கை நாவலைக் குறிப்பிட்டவர் அந்தக் கால அரசியலை வைத்து எழுதப்பட்ட அந்த நாவல் தற்காலத்து சமூக அரசியலுடன் எப்படிப் பொருந்துகிறது என்று இணைத்து ஒப்பிட்டுப் பேசினார்.

Advertisment

sr

எஸ் .ராமகிருஷ்ணனால் குரு என்று மதிக்கத்தக்க எஸ்.ஏ. பெருமாள் வாழ்த்துரை ஆற்றினார்.அவர் பேசும்போது எஸ் ராமகிருஷ்ணனின் ஆரம்பகால வளர்ச்சி வேகம் என்று மாறுவதைத் தொடர்ந்து கவனித்தவர் வளர்ந்து இன்றுஎல்லாத்துறையிலும் எழுதும் எழுத்தாளராக வளர்ந்து நின்றிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்தினார்.

இக் கருத்தரங்க நிகழ்வில் எஸ். ராமகிருஷ்ணனின் படைப்புகள் சார்ந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள்,வளரும் எழுத்தாளர்கள் , பத்திரிகையாளர்கள், வாசகர்கள் எனப் பல்வேறு வகைமையினரின் விமர்சன உரைகள் இடம்பெற்றன. கருத்தரங்கம் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நான்கு அமர்வுகளாக நிகழ்ந்தது.

Advertisment

அவரது சிறுகதைகள் சார்ந்து அகர முதல்வன், சுரேஷ் பிரதீப், காளிப்ரஸாத் கருத்துரை வழங்கினார்கள். சிறுகதைகள் மூலம் தாங்கள் கண்ட ரசனை அனுபவத் தையும் தத்துவ தரிசனத்தையும் விளக்கினார்கள்.

அவரது பயணக் கட்டுரை குறித்து ராம் தங்கம், மயிலாடுதுறை பிரபு பேசினார்கள் .தங்களுக்கு அவர்களது பயணக்கட்டுரைகளால் தூண்டப்பட்டு தாங்கள் செய்த பயணங்களை விவரித்தனர்.

வாழ்வியல் கட்டுரைகள் குறித்து பாலைவன லாந்தர் உரையாற்றினார். அவர் எஸ் ராவின் அனுபவங்கள் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை விவரித்தார். அயல்மொழிக் கவிதைகள் குறித்து வேல் கண்ணன் பேசினார்.

srr

ஓவியக்கலை குறித்த எஸ்.ரா.வின் படைப்புகள் பற்றிப் பேசிய சுந்தரபுத்தன், சமகாலத்தில் ஓவியம் போன்ற நுண்கலைகள் பற்றி எழுதும் இதழாளர்களுக்கு தமிழ்ப் பத்திரிகை உலகில் அங்கீகாரமும் உரிய மதிப்பும் கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சினிமா எழுத்து பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது எஸ். ராமகிருஷ்ணன் எப்படித் தன்னைப் பாதித்தார். அப்படிப் பாதித்த ஒருவர் எப்படித் தனது படத்தில் பணியாற்றும் அளவிற்கு நெருக்கமானார் என்பது பற்றிப் பேசினார்.

நாவல் சார்ந்த அமர்வில் சுரேஷ்பாபு நெடுங்குருதி பற்றியும், சௌந்தர்ராஜன் யாமம் நாவல் பற்றியும், கடலூர் சீனு உறுபசி குறித்தும், கவிதைக்காரன் இளங்கோ துயில் பற்றியும் கருத்துரை வழங்கினர்.நாவலைப் பற்றிப் பேசும்போது அவை தங்களுக்குள் ஏற்படுத்திய வாசிப்பு அனுபவத்தையும் வெளிப்படுத்திய பொருளையும் தத்துவத்தையும் வெவ்வேறு வகையில் விளக்கினர்.

மாற்றங்களை நாவல் கூறும் பொருளையும் தத்துவத்தையும் வேறுவகையில் விளக்கினர்.

நிறைவாக எஸ் ராமகிருஷ்ணன் பேசியபோது,வழக்கமாக பேசுவதுபோல் இருந்த முன் தயாரிப்பும் நிதானமும் அவரிடம் இல்லை. ஏனென்றால் அந்தளவுக்கு அவர் உணர்ச்சி வசப்பட்டு நெகிழ்ந்த நிலையில் இருந்தார்.

அவர் பேசும்போது, "இந்த விழாவிற்கு நீதியரசர் சந்துரு அவர்கள் வந்தது பெருமைக்குரியது.

அவர் வழக்கறிஞராக இருந்த போது சந்தித்த வழக்கு பற்றிய ஜெய்பீம் படமாக வந்துள்ளது.

அதை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நீதித்துறையின் பெருமையாக அவர் இருக்கிறார். அவர் இங்கே வந்தது எனக் குப் பெருமை. என் எழுத்து வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எனக்கு பல ஆசான்கள் வழிகாட்டியதுண்டு .அப்படிப்பட்ட ஆசான்கள் இல்லாமல் யாரும் உயர முடியாது.

அப்படி என்னுடைய ஆசான் என்று மதிக்கக்கூடிய தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் வந்தது பெருமைக்குரியது.

இது மாதிரி கருத்தரங்கங்களில் எனக்கு ஆர்வமில்லை.கல்லூரிகளில் நடக்கும் வழக்கமான சம்பிரதாயமான கருத்தரங்கம் ஆக இது நடக்கக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன் .

சம்பந்தமில்லாத யாரோ சிலரால் நடத்தப் படுவதைவிட எனது வாசகர்களால் அன்போடு ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய இந்தக் கருத்தரங்கம் எனக்கு இன்னும் நெருக்கமாகப் படுகிறது.

அதன்படியே சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

எனது படைப்புகள் குறித்து பலரும் பலவிதமாகப் பேசினார்கள் .நான் எழுதுவதோடு சரி மற்றபடி அந்த படைப்பைப் பற்றி முழுதாக மறந்து விடுவேன். சில கதாபாத்திரங்கள் பெயர்கள்தான் என் நினைவில் இருக்கும்.மற்றபடி எல்லாம் மறந்துவிடும். எனது படைப்புகளைப் பற்றி நீளமாக பேசும்போது அது யாரோ எழுதிய படைப்பாக எண்ணி நான் அதிலிருந்து வெளியே நின்றுதான் கேட்பேன். அந்த நிலையில் இங்கே ஒவ்வொருவரும் என் எழுத்தை எந்த அளவுக்கு வாசித்திருக்கிறார்கள் எப்படி உணர்ந்து இருக்கி றார்கள் என்பதைப் பற்றி விரிவாகப் பேசிக் கேட்கும்போது அது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது .அது மட்டுமல்ல நமது எழுத்து இளைய தலைமுறைக்கு எப்படிப் போய் சேர்ந்துள்ளது எப்படி அது கவனிக்கப்படுகிறது என்கிற புரிதலை எனக்கு அளித்தது.

இருக்கலாம் .ஆனால் எழுத்துக்கும் படைப்புகளுக்கும் கால வரையறை கிடையாது. எழுத்து காலத்தை வென்று நிற்கும் -அந்த நூற்றாண்டு காலத் தனிமை நாவலுக்கு அந்த பெண் இப்போதுதான் படிக்கும் முதல் வாசகியாக இருக்கலாம். எழுத்துக்கு வாசகர்களும் இதுபோல் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். எழுத்து காலத்தை வென்று நிலைத்து நிற்கும். அப்போது எழுத்தாளனும் நினைக்கப்படுவான். என்றார்.

'எஸ் ராவுடன் ஒரு நாள் ' இலக்கிய வாசகர்களுக்கு ஒரு முழுநாள் இலக்கிய அனுபவமாக இருந்தது.

-அபூர்வன்